திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பாட பட்டதாரி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பயின்று வருகிறார். இவர் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தை கற்பித்து வருகிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆங்கிலப் பயிற்சிக்கான சிறு சிறு வீடியோக்களையும் தயாரித்திருக்கிறார்.
குறிப்பாக இவர் தயாரித்த கியூ ஆர் கோடுகள் அடங்கிய பயிற்சி ஏடு பள்ளி தலைமையாசிரியரால் பாராட்டப்பட்டது. இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானதைத் தொடர்ந்து இவரது பணியைப் பாராட்டி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் இளம் கல்வியாளர் விருதினை அறிவித்தது. தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இளங்கோ, மனோஜ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாருதி மாலனுக்கு இளம் கல்வியாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.