உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 364 மருத்துவ, மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சியில் 364 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இது ஒர் முக்கியமான பணி, சாதாரணமாக டாக்டர்களை நர்சிங் மாணவ, மாணவிகளை பார்க்க முடியாது. நேரம் காலம் தவறாமல் பணியாற்ற வேண்டும்.. இந்த படிப்பை தேர்வு செய்து உங்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

முதலமைச்சர் அல்லும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளர்ச்சி பெற்று உள்ளது. தனிநபர் வருமானமாக இருந்தாலும், வளர்ச்சி திட்டமாக இருந்தாலும், கட்டமைப்பு செய்வதாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் பொருளாதார வளர்ச்சியாக இருந்தாலும் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே முதன் மாநிலமாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. சமூகநீதி, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது, நிதி உதவி, கடன் உதவி தொழில் வளர்ச்சி பெண்களை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது..

ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தமிழக மாணவர்கள் படித்து வருகின்றன. அதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொணண்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஆறு பேர் மட்டும் பயணங்கள் மேற்கொண்ட நிலையில் இந்த ஆண்டு 368 பேர் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அத்தனை செலவுகளையும் அரசு ஏற்று கொண்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்களை மேலும் முன்னேற்றுவதற்கும் தமிழ் சமூகம் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார்.தற்போது இந்த மடிக்கணினி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துறை மிக, மிக முக்கியமானது. அவ்வப்போது அப்டேட் ஆக வேண்டியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் நல்ல தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதி மட்டுமின்றி உலகத்தில் எங்கு இருந்தாலும் சென்னை வந்து மருத்துவ சிகிச்சை பெற்று தலைநகராக சென்னை விளங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் மருத்துவமனை எல்லாம் இந்த அளவிற்கு இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

10, 20 ஆண்டுகள் சேவை ஆற்றிய மருத்துவராக இருந்தாலும் தற்போதுள்ள மருத்துவத்தை அப்டேட் செய்வதற்கு இந்த லேப்டாப் வசதியா இருக்கும. உங்களை தகுதி உள்ளவர்களாக கூடுதல் தகுதி உள்ளவர்களாக மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த லேப்டாப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *