மதுரையில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி
களுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி நல அலுவலரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.