கம்பம் அருகே கம்பம் புதுபட்டியில் அரசு பொது தேர்வில் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொழிலதிபர் கே எம் பில் ரவி வழங்கினார்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் சிறந்த கல்வி நிறுவனமான கே எல் எஸ் எஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு நடத்திய பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி உலகத்தின் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் தலைமை வகித்தார். ஜெ.ஆர் குழுமத்தின் தலைவரும் தேனி மாவட்ட சிறந்த தொழில் அதிபருமான கே எம் பி எல் ரவி இவருடைய துணைவியார் ஜமுனா ரவி அவர்களின் சொந்த நிதியில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் திமுக பேரூர் கழக செயலாளர் எம்.டி.எம். பார்த்திபன் நகர்நல சங்க தலைவர் எஸ் சி எஸ் டி ஆசிரியர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் முனைவர்.க. சுப்ரமணியன் செயலாளர் ச. ரங்கராஜ் பொருளாளர் எஸ் ஆசிக் அகமது துணைத் தலைவர்கள் பி.பஷீர் பி .ஏ .ரவிச்சந்திரன் புலவர் இரா சம்பத்து சுகந்தம் ஸ்டோர் ஜி. கே. முருகன் சமுதாயத் தலைவர் கோ. வேலுச்சாமி துணைச் செயலாளர்கள் சோடா எம் பாண்டியன் எம். சங்கர் எம். செல்லமுத்து இ. கணேசன் பி. உதயகுமார் உள்பட நகர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜெ .ஆர் குழுமத் தலைவரும் தொழிலதிபருமான கே எம் பில் ரவி நன்றி கூறினார்