திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜஎன்டியுசி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜஎன்டியுசி தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் வலஙகை குலாம் மைதீன் தலைமை வகித்தார்,

தொழிற்சங்க வலங்கைமான் நகர தலைவர் அகமது மைதீன், வலங்கை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொதுச் செயலாளர் சலீம் பொங்கல் அடுப்பினை பற்றவைத்து துவக்கி வைத்தார்.

வலங்கைமான் பாடைகட்டி மகா மாரியம்மன் ஆலய முன்னாள் தலைமை அர்ச்சகர் இரா.செல்வம் பூசாரியார் விளக்கேற்றி வைத்து பொங்கல் திருநாளை பற்றியும், தமிழரின் கலாச்சாரத்தை பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கோல்டன் மளிகை முகமது ஷரீப் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர். முன்னதாக வலங்கைமான் பாதிரியார் ஆல்பர்ட் வருகை தந்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து சென்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் பாலா, சுவாமிநாதன், அமானுல்லா அனீஸ், ஜமாலி ஜாமியா மஸ்ஜித் இஸ்மத் மற்றும் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் துணைத் தலைவர் ஜாகிர் உசேன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *