கம்பம் நகரில். வடக்கு வட்ட அன்பிற்பிரியாள் திருக் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள வடக்கு வட்ட வாணியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அன்பிற் பிரியாள் திருக் கோவிலில் மார்கழி மாத 27ஆம் கிழமை ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்டளை தேனி மாவட்ட வாணியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். சுந்தர வடிவேல் சுமதி குடும்பத்தார் சார்பில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் தட்டு மஞ்சள் கயிறு மஞ்சள் கிழங்கு சேலை ஆகியவற்றை தேனி மாவட்ட தலைவர் சுந்தர வடிவேல் சுமதி தம்பதிகள் வழங்கினார்கள்

மேலும் வடக்கு வட்ட வாணியர் சமுதாயத் தலைவர் எம்.ஜெயபாலன் பழனியம்மாள் தம்பதிகளின் குடும்பத்தார்கள் சார்பாக குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைத்து சமுதாய பொது மக்கள் அனைவருக்கும் வெண்பொங்கல் கேசரி சாம்பார் சாதம் போன்ற அறுசுவை சைவ உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்ட வாணியர் சங்க தலைவர் ஜெயபாலன் செயலாளர் முத்துப்பாண்டி பொருளாளர் குணசேகரன் வாணியர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் நாட்டாமை சேது உள்பட வாணியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *