கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், கோனார் கோட்டை கிராமத்தில் நேற்று நடைபெற்ற முருகன் பக்தர்கள் சார்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்,
அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சங்கிலி பாண்டியன், கயத்தாறு திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கிளைக் கழகச் செயலாளர் முருகன், வேல் பாண்டியன், ராஜாபுது குடியை சேர்ந்த பால்ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஊர் நாட்டாமை, பெரியவர்கள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்..