செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிக்காடு ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம் இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சித்ரா ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு வே.ஏழுமலை,மற்றும் எஸ்.கே.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பெரிய வெளிக்காடு ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் இளைஞர் அணி,மகளீர் அணியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.