சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ம் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மேலும் திருக்கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரினை வருவாய் மற்றும் பேரிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, தங்கப்பாண்டியன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, உறுப்பினர் ராமகிருஷ்ணன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனிச் செல்வம், மாநில வணிகர் சங்க பேரமைப்பு துணைத்தலைவர் திவ்யா எம்.ரெங்கன், நகை கடை உரிமையாளர்கள் சங்கரசுப்பு, சங்கர சுப்பிரமணியன், சங்கரன், சுந்தர், கண்ணன், குமரன், அருணாச்சல் ஆட்டோ கனகவேல், மேலநீலிதநல்லூர் ஒன்றிய அதிமுக பிரமுகர் எஜமான் செந்தில்குமார், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க துணைத் தலைவர் மாரிமுத்து மட்டும் மண்டகப் படிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை
நாளை (21.7.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்து வருகின்றனர்.