செய்தியாளர் வெங்கடேசன்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் ரெட்டி வளம் பகுதியில் உள்ள டிபிசி வளாகத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்பி ரவீந்திரன் தலைமையில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு விழா நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றார்கள்.

மேலும் பொங்கல் பரிசு வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி விழாவில் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சிவா மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஎஸ் முரளி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ராம்கி, பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் என்ஆர்,சீனிவாசன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், பிரதிநிதி கேசி சம்பத்,நெசவாளர் அணி அமைப்பாளர் குலத்துங்கன்,உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்திற்குவருகை புரிந்த அனைவருக்கும் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் என்,பிரகாஷ், வடக்கு ஒன்றிய பொருளாளர் மகேந்திரவாடி செல்வம் நன்றி தெரிவித்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *