கரூர் செய்தியாளர் மரியான் பாபு

7.52 கோடி மதிப்பில் திட்டபணி,புதிய வளர்ச்சி திட்ட பணியை திறந்து வைத்த செந்தில்பாலாஜி.. முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப.தலைமையில், கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.52 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் மற்றும் 18 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர்.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கரூர் மாநகராட்சியில் வார்டு எண்.36,42,44, மற்றும் 47 அங்கன்வாடி மையம்,புதிய சிறுசமுதாய கூடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் பழுதுகளை சரிபார்த்தல் பணி என மொத்தம் ரூ.60.45 இலட்சம் மதிப்பீட்டில் 5 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தும்,வார்டு எண்.36,37,38,42, மற்றும்44 ஆகிய பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறு, புதிய நியாய விலைக்கடை, புதிய நிழற்குடை மற்றும் பகுதி நேர நியாய விலை கடை ரூ.39.55 இலட்சம் மதிப்பீட்டில் 7 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தும்,கரூர்ஊராட்சி ஒன்றியக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் கிராம அறிவுசார் மைய கட்டிடம் ரூ.70.44 இலட்சம் மதிப்பீட்டிலும், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி சின்னவரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.6.66 இலட்சம் மதிப்பீட்டில் இரு சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகளையும்,கடம்பங்குறிச்சியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்,

வாங்கல் குப்புச்சிபாளையம்,ஊராட்சி பசுபதிபாளையம் நாயக்கர் தெருவில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், வாங்கல் குப்புச்சி பாளையம் ஊராட்சி வாங்கல் ஸ்ரீனிவாசபுரம் ராஜேந்திரன் வீடு முதல் செந்தில்குமார் வீடு வரை ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும்,

வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி வாங்கல் முதலியார் மயானம் சுற்றுசுவர் ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளையும், வாங்கல் பண்டாரம் மயானம் சுற்றுச்சுவர் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளையும், குப்புச்சிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.11.18 இலட்சம் மதிப்பீட்டில் உள்ள சாலையினை மேம்படுத்துதல் பணிகளையும்,வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி ஓடையூரில் புதிய மினி சமுதாயக் கூடம் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளையும், வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி கொங்கு நகர் பிரபு வீடு முதல் நடேசன் வீடு வரை ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும்,


மாரிகவுண்டன்பாளையம் மண்மங்கலம் – வாங்கல் சாலை வரை ரூ.233.00 இலட்சம் மதிப்பீட்டில் இடைவழித்தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் அமைக்கும் பணிகளையும், வள்ளியப்பாளையம் மண்மங்கலம் -வாங்கல் சாலை வரை ரூ.238.00 இலட்சம் மதிப்பீட்டில் இடைவழித்தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து பெட்டிபாலம் அமைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தும்,புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரிய வரப்பாளையம் ஏடி தெருவில் மணிகண்டன் வீடு முதல் குணா வீடு வரை ரூ.4.75 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணிகளையும், வாங்கல் ஊராட்சி மன்ற அருகில் கிளை நூலகத்திற்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்தினை திறந்து வைத்தும் என மொத்தம் ரூ.7.52 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் கே.எம்.சுதா, மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி. கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா, வட்டாட்சியர் மோகன்ராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *