சேம்பியன் ஷிட்டோ ரெயோ கராத்தே தோ இந்தியா அமைப்பின் கீழ் செயல்படும் வகையில் இண்டிபெண்டண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் எனும் பயிற்சி கோவை போத்தனூர் அருகே உள்ள திருமறை நகர் பகுதியில் துவங்கப்பட்டது..
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கராத்தே,சிலம்பம்,மற்றும் கிக் பாக்சிங் ஆகிய பயிற்சிகளை வழங்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இண்டிபெண்டண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் பயிற்சி மையத்தின் துவக்க விழா சேம்பியன் ஷிட்டோ ரெயோ கராத்தே தோ இந்தியா அமைப்பின் நிறுவன தலைவர் மற்றும் தேர்வாளர் கிருஷ்ணகுமார்,பொதுசெயலாளரும் தலைமை பயிற்சியாளரும் ஆன ஆசாத் காமில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி,தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்,போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்குமார்,டிஸ்கோ பிளவர் டெக்கரேட்டர்ஸ் உரிமையாளர் டிஸ்கோ காஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய பயிற்சி மையத்தை துவக்கி வைத்தனர்..
இதனை தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற உள்ள ஏசியன் கேம்ஸ் போட்டிக்கான தேர்வு போட்டியில் கலந்து கொள்ள உள்ள பள்ளி மாணவர் ரித்வினுக்கு சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்…
திருமறை நகர் பகுதியில் உள்ள எமிரேட்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் டர்ஃப் வளாகத்தில் வாரந்தோறும் திங்கள்,புதன்,வெள்ளி என மூன்று நாட்கள் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை கராத்தே,சிலம்பம் மற்றும் கிக் பாக்சிங் ஆகிய விளையாட்டு பயிற்சிகளை அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு வழங்க உள்ளதாக பயிற்சி மைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்..
நிகழ்ச்சியில்,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அசார்,அபுதாகீர்,அசார் மற்றும் தி.மு.க.சாய்பாபாகாலனி பகுதி மாணவரணி அமைப்பாளர் கோவை தல்ஹா,உட்பட பலர் கலந்து கொண்டனர்…