செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஆலம் இன்டர்நேஷனல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ந்தனர். முன்னதாக பள்ளியின் தாளாளர் சுமித்தா தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்

பின்பு பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து உறியடி நடனம் உள்ளிட்ட
கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *