திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தாளாளர் அருட்தந்தை.I.ஜான்சன் எடின்பர்க் தலைமை தாங்கினார். இ-சேவை சங்க தலைவர் லயன். இ.தனராஜ் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்.தீபா பெருமாள் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய சிறப்புரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட இ -சேவை மைய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *