கடலூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஜெயராமமூர்த்திக்கு பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி 2வது நாளாக மாநில பொதுசெயலாளர் சந்தானகிருஷ்ணன் தலமையில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவு எடுக்கப்படாததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நீடிக்கிறது