செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிலூர் சுகாதார மையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை இரா.தேன்மொழி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், டி. சீனுவாசன் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்த கருத்துகளை மாணவர்களுக்கு விளக்கினர்.
அறிவியல் ஆசிரியை மீனா சுகாதாரம் குறித்த கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு ஊக்கமளித்தார். இறுதியில்
ஆசிரியை அப்ரின் பானு நன்றி கூறினார்.