சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 230 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டம் மூலமாக விலையில்லா மடிகணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி கல்லூரி முதல்வர் விஜயா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்,கல்வியறிவு மட்டுமல்லாமல் உலக அறிவையும் அறிந்து கொள்வதற்காக தமிழக முதல்வரால் இலவச மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.
தாலிக்கு தங்கம், இலவச மடிகணனி போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டது கடந்த அதிமுக ஆட்சியில் தான் திருவொற்றியூரில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற கலைஞர் ஆட்சி காலத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.பி.சாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பின் 10 ஆண்டுகளாக திருவொற்றியூரில் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்ட நிலையில் 2021 இல் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.