ஏ பி பிரபாகரன் பெரம்பலூர்
செய்தியாளர்.
பெரம்பலூர்.ஜன.13. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரத்தில் கட்டப்பட்டுள்ள முழுநேர புதிய நியாய விலைக்கடையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் வகித்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி -2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முழு நேர நியாய விலை கடையின் மூலம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள 892 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் போக்குவரத்து பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக்கிணற்றின் பயன்பாட்டினையும் அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிடும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் சமத்துவப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஸ்குமார், பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அட்மா தலைவர் ஜெகதீசன், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பாஸ்கர், கருணாநிதி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.