தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட பொங்கலாக சமத்துவத்துடன் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தாா். இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட 42வது வாா்டு பகுதியில் தமிழா் திருநாளை யொட்டி 8 தெருக்களில் 700 போ் கலந்து கொண்ட கோலப்போட்டியும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு நடுவா்களாக பள்ளி தலைமை ஆசிாியா்கள் ஜெகதீஸ்வாி, மாாியம்மாள், செயல்பட்டனா்.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாிசுகளை வழங்கி சமத்துவ பொங்கல் பானையில் அாிசியிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத்திருவாழாவான பொங்கல் திருவிழாவை சமத்துவ பொங்கலாகவும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பகுதிகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்தையும் அன்புடன் பழகி கொண்டாடும் வகையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டு கடமை பட்டுள்ளேன்.

2021ல் முதலமைச்சராக தளபதியாா் பொறுப்பேற்றதும் கொரோனா 2ம் அலை இருந்த நேரம் ஆக்ஜிசன் தட்டுபாடு மருத்துவமனையில் இடம் பிரச்சனை இப்படி பல்வேறு வகையில் இருந்த காலத்தில் அந்த கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை நோில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சா் ஸ்டாலின் அப்போது பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ரேசன் கடைகளுக்கு ரூ 4 ஆயிரம் வழங்கினாா். பால்விலை 3ரூ குறைக்கப்பட்டது. மகளிா் உாிமைத்தொகை இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சி நமக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஆட்சியில் எல்லாத்துறைகளிலுமே தமிழகம்வளர்ச்சி யடைந்துள்ளது.

இதை பாஜக அரசு பாராட்டியுள்ளது. குறைசொல்வதற்கு எதுவும் இல்லை 2008ல் கலைஞர் ஆட்சியின் போது ஊராட்சி பகுதியாக இருந்த முள்ளக்காடு முத்தையாபுரம் சங்கரபோி அத்திமரப்பட்டி தூத்துக்குடி ரூரல் பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டபின் 2011 முதல் 21 வரை 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் புதிதாக எந்த பணியும் நடைபெறவும் இல்லை அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணமும் அவா்களுக்கு இல்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கென்று பல்வேறு வகையில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய தாா்சாலைகள் கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரமும் உயரவேண்டும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும். என்று பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஜாதிமதம் பாா்க்காமல் தமிழ்நாட்டில் அனைவரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா் இந்த ஓற்றுமையுடன் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் நாம் யாா் என்று அவா்களுக்கு காட்டவேண்டும் அதற்கான பணிகளை இப்போதே அனைவரும் துவக்க வேண்டும் திமுக அரசுக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்து மீண்டும் தளபதியாரை அாியனையில் அமர செய்ய உறுதி செய்ய வேண்டும். சூாிய ஓளியின் மூலம் வௌிச்சம் கிடைப்பதை போல் எல்லோருடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டும் சமத்துவம் மலரட்டும் தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் எல்லோருக்கும் நல்ல வழி பிறக்கட்டும் என்று பேசினாா்.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *