சிவ சேனா கட்சியின் சார்பாக கண்டன அறிக்கை

மராத்தியத்தில் கொக்கரித்த ராஜ் தாக்கரே சிவ சேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் எனமாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை தமிழன் என்றும் லுங்கி கட்டிய வேஷ்டி கட்டியவன் என்றும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால் காலை வெட்டுவேன் என்றும் கூறி அண்ணாமலையை இழிவு படுத்திய ராஜ் தாக்ரேவை கடுமையாக கண்டிக்கின்றோம் மராட்டியத்தில் மராத்தி மொழி பேசாதவர்களை
நவ நிர்மன் சேனாவினர் தாக்கி வருகிறார்கள்

இச்செயல் துரதிஷ்டவசமானது தமிழகத்தில் எப்படி திராவிட சித்தாந்தம் ஹிந்தி எதிர்ப்பை தமிழர்கள் மத்தியில் இங்கே ஹிந்தி மொழி எதிர்ப்பு ஹிந்தி மொழி அழிப்பு‌ இதுதான் தமிழகத்தின் நிலைமை ஆனால் ஒரு படி மேலே போய் மராத்தியில் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்

அதே போல் மராத்தியில் இந்திக்கு எதிராக நவநிர்மன் சேனாவினர் மராத்தி மொழி பேசாதவர்களை தாக்கி வருவது கண்டனத்துக்குரியது இதனால் மொழிவாரி பிரச்சினை ஏற்படும் தமிழகம் வந்தாரை வாழவைக்கும் சொர்க்கபூமி இது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் தமிழர்களை இழிவு படுத்தினால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து செழிப்பாக வாழ்கின்ற மராத்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும்‌ பூர்வ குடி தமிழர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இணக்கமான சூழல் நிலவாத நிலை உருவாகும் மத்திய அரசும் தமிழக அரசும் இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற ஒரே எண்ணத்துடன் பயணம் செய்யும் எங்கள் தேசியத் தலைவர் ஏக் நாத் சிண்டேஜியின். கொள்கைக்கு ஏற்ப தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *