திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பாக அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நடராஜன் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் தனபால் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் இல்லை என்பதாலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், வருமான வரி உற்சவரம்பு மற்றும் காலி பணியிடங்கள் நிரப்புதல் போன்ற எந்த தகவலும் இல்லாததை கண்டித்தும், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தையே இல்லாத பட்ஜெட்டின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன குரல் எழுப்பினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன் நிறைவுறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கதிரவன், பிரபு, மகாலட்சுமி, ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிங்காரவேலு அனைவருக்கும் நன்றி கூறினார்.