காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 தமிழ் திருநாளாம் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டை பெருமையுடன் வெளிப்படுத்தினர்.
விழாவின் தொடக்கமாக ஒயிலாட்டம், காவடியாட்டம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து வள்ளி கும்மியாட்டம், சலங்கையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கம் முழுவதும் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரிய செல்வமாக விளங்கும் நாட்டுமாடுகள் குறைந்து வரும் நிலையில், காங்கேயம் காளை உள்ளிட்ட நாட்டை இன மாடுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.மேலும் குதிரைகள், அரிய வகை நாய்கள், கோழிகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பாரம்பரியமும் உயிரின பாதுகாப்பின் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரேக்ளா இரட்டை மாட்டு வண்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயணம் செய்து, பாரம்பரிய கிராமிய அனுபவத்தை உணர்ந்தனர்.
அதேபோல் குதிரை ஏற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள் குதிரையில் சவாரி செய்து கல்லூரி வளாகம் முழுவதும் பயணித்தனர்.
பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளும் இணைந்து பொங்கல் வைத்து, உற்சாக நடனத்துடன் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பொங்கல் விழா குறித்து மாணவர்களின் கருத்துகள்:-
பொங்கல் என்பது உணவுத் திருநாள் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடு, ஒற்றுமை, இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவூட்டும் திருநாள் என மாணவர்கள் தெரிவித்தனர் இவ்வகை விழாக்கள் மாணவர்களுக்கு தமிழ் மரபை நேரடியாக அறிய உதவுவதாகவும், பாரம்பரிய கலைகளின் மீது ஆர்வத்தை வளர்ப்பதாகவும் கூறினர்.
ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தலைமுறையினர் தமிழர் கலாச்சாரத்தை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விழாக்கள் முக்கியம் என தெரிவித்தனர் கல்லூரிகளில் நடைபெறும் பொங்கல் விழாக்கள் மாணவர்களின் ஒற்றுமையையும், சமூக பொறுப்புணர்வையும் வளர்க்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.