பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலை. திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார்
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆணையின்படி சம்மத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் புதியம் புத்தூரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான இளைய ராஜா சமத்துவ பொங்கல் கொண்டாடும் வகையில் ஆயிரம் பேருக்கு வேஷ்டி. சேலை மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
அனைவரும் உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாட வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் தமிழகம் மீண்டும் வளர்ச்சி அடைய ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று பொதுமக்களிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா கூறினார். அப்போது திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்