கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் பாரம்பரிய கலைகளை நினைவு கூறும் விதமாக சிலம்பம்,கபடி,உறியடி,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாணவர்கள் உற்சாகம்

தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையை கோவையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்..

இதன் ஒரு பகுதியாக கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்த மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்..

தமிழர் பரம்பரிய கிராமங்களில் நடைபெறும் பொங்கல் விழாக்களை போல் கல்லூரி வளாகத்தில் கோலமாக நடைபெற்ற விழாவில், முன்னதாக அக்ரி, சி.எஸ்.இ., ஏ.ஐ.டி.எஸ்.,இ.சி.இ, மெக்கானிக்கல் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு துறை மாணவர்கள் தனித்தனியே மண்பானையில் பொங்கல் வைத்து மாணவிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர்..

மேலும் தமிழர்கள் கலையான தப்பாட்டம், கும்மி ஆட்டம் போன்றவற்றை மாணவிகள் உற்சாகமாக ஆட, ஒரு புறம் பொங்கல் பண்டிகையின் வீரத்தை பறை சாற்றும் விதமாக சிலம்பம்,வாள் வீச்சு,கபடி,உறியடி போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

தமிழர் கிராமிய பண்பாட்டுத் திருவிழாவாக நடைபெற்ற பொங்கல் விழாவில் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா,செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர்கள் அனீஷ் குமார்,சாந்தினி அனீஷ் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன் உட்பட பல்வேறு துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *