வடலூர் நகராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டிலான வள்ளலார் பேருந்து நிலையயித்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டிலான வள்ளலார் பேருந்து நிலையித்தினை தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், நகராட்சி நிருவாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி , மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆகியோர் முன்னிலையில்,நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி, மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார்,வடலூர் நகரமன்றத் தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் சுப்புராயலு, மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், நகராட்சி ஆணையாளர் மல்லிகா,நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயலு,நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.