பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் அருகே, தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அக்கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ். இராஜேந்திரன் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தையும், சமத்துவம், ஒற்றுமை ஆகிய மதிப்புகளையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டதுடன், பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை தாமரை எஸ். இராஜேந்திரன் அவர்கள் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் திருமதி பவானி, மாவட்ட பொருளாளர் திரு. அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஒபி சங்கர், இணைச் செயலாளர் நா. பிரேம் குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி ஜீவா அரங்கநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஓ. வெங்கடாஜலபதி, அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும், அதிமுக நிர்வாகிகள் ஏ.பி. ஜோதிவேல், ஆதிகுடிக்காடு சங்கர், நகர அதிமுக செயலாளர் ஏ.பி. செந்தில், அரியலூர் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் திருமதி சுந்தரி, வடக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் முடிவில் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமை ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.