கம்பம் மெட்டு மலைச்சாலையில் மிலா மான்கள் உலா வானங்கள் மெதுவாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல் தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலை 16 கிலோமீட்டர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும் இந்தச் சாலையில் சமீப காலமாக மிலா மான்கள் கூட்டம் கூட்டமாக கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் மலைச்சாலையில் நெடுஞ்சாலைகளை கடந்து செல்கிறது
இறை தேடி இரவில் ஆசாரிப்பள்ளம் மந்திப்பாறை போன்ற பகுதியில் இருந்து சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது மேலும் சாலை ஓரங்களில் மிலா மான்கள் உலா வருகிறது இதனை இப்பகுதியில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கிறார்கள்
எனவே இப்பகுதியில் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து பஸ்கள் அதிகம் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
எனவே இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் செல்ல வேண்டுமென வனத்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி உள்ளார்கள்.