திண்டுக்கல் நகர் மலைக்கோட்டை அடிவாரம் உள்ள கோட்டை குளத்தில் இருக்கக்கூடிய நீரில் உள்ள மீன்கள்
2 நாட்களாகசெத்து மிதக்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
இறந்த மீன்களை எடுத்து வெளியேற்ற வேண்டும் இந்த மீன்கள் இறப்புக்கு காரணமான செயல் என்ன என்பதை விசாரணை செய்து ,கோட்டைகுளத்து நீரை ஆய்வு செய்து வேறு ஏதேனும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கின்றதா என பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் இந்த கோவில் குளத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி எப்பொழுதும் கண்காணிக்க வேண்டும் .
அப்படி செய்யும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் தற்காத்துக் கொள்ள முடியும்.
மேலும் அதிகமான மீன்கள் இந்த குளத்தில் வாங்கிவிட தேவையான நடவடிக்கையை தொல்லியல் துறை அறநிலையத்துறை மாநகராட்சி உள்ளிட்டவை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.