கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்…
தமிழர்களின் விவசாயம் வீரத்தை போற்றும் வகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்டி வருகிறது
இந்நிலையில் கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் சாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து கொண்டாடும் ‘சமத்துவப் பொங்கல்’ விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஹெரால்டு ஷாம் தலைமையில் நடைபெற்ற விழாவில் டியூகாஸ் முன்னாள் தலைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில், மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு ,மஞ்சள் கொத்துகள் கட்டி பொங்கலிடப்பட்டது.விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக முழக்கமிட்டனர்..
விழாவின் சிறப்பம்சமாக, ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்..
நிகழ்ச்சியில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பம் உறியடித்தல் போன்ற தமிழர் வீர விளையாட்டுகளும் இடம் பெற்றன நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகளும் நடைபெற்றது..