மதுரை கிழக்கு வரிச்சியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியை எமிமாள்ஞான
செல்வி, எஸ்.எம்.சி தலைவி அனிதா, ஜ உஷா, காளீஸ்வரி தாமரைசெல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதே போன்று மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் மணிமாறன் கலந்து கொண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவித்தார்.பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கோலப்போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு பொங்கல், கரும்பு, தேங்காய், வாழைப்பழம் வழங்கப்பட்டது. மகிழ்முற்றம் மாணவி தலைவர் சாதனா நன்றி கூறினார்.