தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு முகாம் செயல்பட்டு வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்றவுடன் படகு முகாம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து தெரிவித்து கொண்டு வந்தார் அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்குள் கண்டிப்பாக பொதுமக்கள் பொழுதுபோக்கு வகையில் படகு முகாம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் அதன்படி அதற்கான பணியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படகு முகாம் துவங்கி உள்ளது. வடகம் முகாமை ஆணையர் பிரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் திறந்து வைத்தார். அதன் பிறகு முறைப்படி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா கடலில் மலர் தூவி முறைப்படி படகு சவாரி செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெடல் படகுமூலம் கடலில்1 மணி நேரம் பொதுமக்களுடன் படகு சவாரி செய்தார் அதுபோல ஆணையர் பிரியங்கா துடுப்பு படகுமூலம் ஆணையர் பிரியங்கா தானே துடுப்பு மூலம் படகை இயற்கிகடலில் படகு சவாரி செய்தார் மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் படகு சவாரி செய்தனர். அதன் பிறகு மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா அங்கு உள்ள வசதிகளை முழுவதும் சுற்றிப் பார்த்தனர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் கேட்டறிந்தார்

அதன் பிறகு மேயர் ஜெகன் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் பூங்கா உள்ளது இந்த நிலையில் இதை இயற்கையாகவே அமைந்துள்ளது கொரோனா காலம் என்பதால் செயல்படவில்லை மூன்று வருட காலமாக முயற்சி செய்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் தென்காசி சேர்ந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

மூன்று நாட்களாக ஒத்திகை நடைபெற்று வருகிறது இன்று பொதுமக்களுடன் சேர்ந்து நாங்கள் படகு சவாரி செய்தோம் இது இயற்கை அழியாமல் இருப்பதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது கேரளா பாண்டிச்சேரி மட்டும்தான் இது போல உள்ளது தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தான் உள்ளது அக்வா சைக்கிள் அதாவது சைக்கிள் படகு தமிழ்நாட்டிலே இங்கு மட்டும்தான் அமைக்கப்பட உள்ளது

உங்கள் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு படகு சவாரி முகம் வந்துள்ளது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார் நிகழ்ச்சியில் ஆணையர் பிரியங்கா மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்ச்செல்வன். லெனின். முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். மண்டல தலைவர் நிர்மல் ராஜ். சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார். மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திமுகவினர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *