துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கீரம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலையில் (13/01/2026) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தோரணம் கட்டி, கரும்பு, பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி பூஜை செய்தனர்.விழாவில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி சிறப்பித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் சிறப்பாக செய்து வரவேற்றார்.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி,ரவிச்சந்திரன், மண்டல பனி மேற்பார்வையாளர் பரத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன், மெடிக்கல் புகழேந்தி மற்றும் தூய்மை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *