செங்குன்றம் செய்தியாளர்
ஜன.14

பொங்கல் தினத்தை முன்னிட்டு மாதவரம் மாநகராட்சி மண்டலம் 3 ன் சார்பில் இறைவனை வழிபட்டு பொங்கல் வைத்து
விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள்.

மாதவரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமையில், பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் மண்டல அதிகாரி குமாரசாமி பொறியாளர் ஆனந்த ராவ், உதவி செயற்பொறியாளர்கள் குமார் ,சரவண மூர்த்தி ,தேவி கலா ,லோகநாதன், ராம்கி திவாகர் உட்பட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முதலாவதாக கோலப்போட்டி , மியூசிக்கல் சேர் ,உறியடித்தல், ஸ்பூன் விளையாட்டு ,போன்ற போட்டிகள் நடைபெற்றது .

இதில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் மாதவரம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு அரிசி , பால் பவுடர் ,பருப்பு ,எண்ணெய் போன்ற நலத்திட்ட உதவிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால் மண்டல அதிகாரி குமாரசாமி உட்பட அதிகாரிகள் வழங்கினார்கள்.


அரசு அதிகாரிகள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றபோது அனைவரும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தியது கான்போர் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *