தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனித்தார்.
பின்னர் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் . சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.