கோவை லயன்ஸ் மாவட்டம் 324 C ன் நேரு நகர் அரிமா சங்கத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஜே.ஆர். அரங்கில் நடைபெற்றது…
324 சி லயன்ஸ் மாவட்ட த்தின் மகாகவி பாரதியார் மண்டல தலைவர் லயன் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் முன்னால் தலைவர் மோகன் ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார் ..
மாவட்ட ஆளுநர் நித்யானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை, முன்னால் ஆளுநர் டாக்டர் சாரதாமணி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்..
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கனலி என்கிற சுப்பு,,செயலாளர் அட்மின் ரேவதி,செயலாளர் ஆக்ட் கீதா, ,பொருளாளர் அட்மின் திவ்யதர்ஷினி,பொருளாளர் திட்டம் தேஜஸ்வினி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரையும் சி.எஸ்.ஆர்.தமிழ்நாடு மண்டல தலைவர் முன்னால் மாவட்ட ஆளுநர் ராம்குமார் உறுதிமொழியை ஏற்று பதவியில் அமர்த்தினார்.
நிகழ்ச்சியில் கவுரவ விருந்தனர்களாக முன்னால் ஆளுநர்கள் பழனிசாமி,ஜீவானந்தம்,மற்றும் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்..
விழாவில் கௌரவ அழைப்பாளர்களாக,முதல் துணை ஆளுநர் ராஜசேகர்,இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ், ஃபேரா கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி, பொது செயலாளர் நேரு நகர் நந்து,
ஜி.ஏ.டி.ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால் ,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில்,சிறந்த மருத்து சேவைக்கான விருதை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவணப்பிரியாவிற்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதே போல சிறந்த தாய்மை எனும் விருதை தாய்ப்பால் தானம் செய்த வைஷ்ணவி பிரகாஷ் என்பவருக்கு சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து விழாவில் பல்வேறு சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இதில் பெண்களுக்கான மார்பக புற்று நோய் பரிசோதனைக்கான இலவச வாகனம் திட்டத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது..
குழந்தைகள் மருத்துவத்திற்கு ரூபாய் 10,000 ,முதியவருக்கு கண் சிகிச்சைக்கான உதவி தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது..
மேலும் காளப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்கும் வகையில் முதல் கட்ட ஊதியத்தை வழங்கினர்.
கல்வி உதவி தொகையாக பள்ளி மாணவணுக்கு ரூபாய் 5,000,கல்லூரி மாணவிக்கு ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.
மேலும் அரசு பள்ளி மாணவ,மாணவிகளின் வாசிப்பு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக வருடம் முழுவதும் இரண்டு பள்ளிகளுக்கு செய்திதாளுக்கான வருட சந்தா தொகை வழங்கப்பட்டது…
சேவை திட்டங்கள் அனைத்தும் 324 சி மாவட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் நறுமலர் கருணாநிதி,ஆனந்தகுமாரி,
மீனா குமாரி,பிரதிபா தேவி,மோகனா ராம்குமார்,ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது..
மேலும் எதிர்கால சேவை திட்டங்களாக காளப்பட்டி பகுதியல் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான தனி கிளினிக் அமைப்பது,உடல் உறுப்பு தானம் குறித்து விழப்புணர்வு செய்வது,கை,கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது..
விழாவில் மாவட்ட அமைச்சரவை செயலாளர்கள் விஸ்வேஸ்வரன்,
முத்துசாமி மண்டல தலைவர்கள் முருகேசன்,வெங்கடேஷ்,பாலமுருகன் உட்பட லயன் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..