திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாகை – புதுவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த 12 மற்றும் 13- ம் தேதிகளில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி கழுதூரில் நடைபெற்றது.

இதில் 12 அணிகள் பங்கேற்றன, இப்போட்டியில் வலங்கைமான் பாலிடெக்னிக் கல்லூரி அணி மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது. பரிசு கோப்பையைத் தட்டிச் சென்ற அணி வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ், முதல்வரின் நேர்முக உதவியாளர் இரா. வேல்முருகன், அனைத்து துறை தலைவர்கள், ரமேஷ் மற்றும் உடற்கல்வியியல் இயக்குநர் அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *