தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார் பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அகமது முன்னிலை வைத்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார் விழாவையொட்டி பேரூராட்சி வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர்

மேலும் இந்த விழாவில் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வேஷ்டி சேலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் மீனா பிரபாகரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *