தேசப் பிரிவினை பெருந்துயர் நினைவு தினமாக அனுசரிக்கப் படுகின்றன. இந்த தினத்தையொட்டி உயர்கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், விவாதங்கள் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தி உள்ளது.

இதனடிப்படையில் வெள்ளைச்சாமி நாடார் பி.எட் கல்லூரியும் காந்தி அருங்காட்சியகத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலன் கெல்லர் அரங்கில் தேசப்பிரிவினை பெருந்துயர் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.

வெள்ளைச்சாமி நாடார் பி.எட் கல்லூரியின் முதல்வர் முனைவர் தா.தேன்மொழி தலைமை தாங்கினார்.இவர் தனது தலைமை உரையில்” எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட நமது தேசம் பரப்பளவில் பெரிய நாடாக இருந்தது. தற்போது அதன் பரப்பளவு சுருங்கி விட்டது.இதன் காரணமாக தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது”

எனக் கூறினார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் தேவதாஸ் “தேசப்பிரிவினையை எதிர்த்தவர் காந்தி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்
றினார். இவர் தனது உரையில் “பல நூற்றாண்டுகளாக பல்வேறு சமயத்தவர்கள் குறிப்பாக இந்துக்களும் முஸ்லிம்களும் நமது தேசத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்;

வருகின்றனர். ஆனால் நமது தேசியத்தலைவர்களின் குறுகிய மனப்பான்மை,
சகிப்பு இன்மையை ஆங்கிலேயர்கள் தனக்கு சாதகமாக்கி நமது தேசத்தை பாகிஸ்தான், இந்தியா என இரண்டாக பிரித்து சுதந்திரம் வழங்கினர். ஒற்றுமை, சமய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த மகாத்மா காந்தி தேசப் பிரிவினையை ஒரு போதும் ஆதரிக்க வில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து காந்திய சிந்தனை சான்றிதழ், பட்டய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காந்தி மியூசியம் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் பி.எட் கல்லூரி செய்து இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *