எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த கூழையர் கடலோரப் பகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலையை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி ஊராட்சி கூழையார் மீனவ பகுதியில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக மரகத பூஞ்சோலை திட்டத்தை ஒரு ஹெக்டர் பரப்பளவில் பூஞ்சோலையானது கூடையார் கடற்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் நாட்டு மரங்கள் பாதுகாக்கும் நோக்கில் தடி மரத்தோட்டம் ,பூக்கும் மரங்கள், பழவகை மரங்கள் ஆகியவர்களை கொண்டு தோட்டம் மற்றும் பூங்காவில் அழகிய நுழைவாயில் பார்வையாளர்கள் ஓய்வு கூடம் நடைபாதைகள் கடல் ஆமையின் வாழ்க்கை முறையை குறிக்கும் வண்ணப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து திறந்து வைத்தார்.

ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட செயலாளர்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம், முருகன் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி வன சரகம், நாகப்பட்டினம் வன உயிர் கோட்டம், திருச்சி வன மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏத்தி மரகத பூஞ்சோலையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். தொடர்ந்து மரகத பூஞ்சோலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மீனவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.