வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவரது 109-வுது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு பொங்கல், குஸ்கா என அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.