நாமக்கல். பரமத்தி வேலூர்.
அல்லாள இளைய நாயகர் மன்னருக்கு அரசு விழா
ஜேடர்பாளையம் பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் தடுப்பனை அருகில் உள்ள மாமன்னர் அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் தை 1-ஆம் நாள் அரசு விழா வை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தும் நிகழ்ச்சி தடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் தலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு அல்லாள இளைய நாயகர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அல்லாள இளைய நாயகர் வாரிசுதாரர் கிருஷ்ணன் பட்டையக்காரருக்கு ஆதிதி ராவிடர் நலத்துறை அமை ச்சர் மருத்துவர் மதிவேந்தன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இவ்விழா நிறைவாக கலெக்டர் துர்காமூர்த்தி இவ்விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய. துறைச்சார்ந்த அலுவ லர்களுக்கும். மேலும், அனைத்து தூய்மைப் பணியாள ளர்களுக்கும் சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி, திருச்செங்கோடு வருவாய் கோட்டா ட்சியர் லெனின் துணை காவல் கண்காணிப்பா பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், உதவி பொறியாளர் (நீர்வளத்துறை) விஜயகுமார், பரமத்திவேலூர் வட்டாட்சியர் கோவிந்தசாமி, கபிலர்மலை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வக்கில் சரவணகுமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். . அல்லான இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் என்ஜினியர் சேகர் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் புதிய திராவிட கட்சி நிறுவனர் ராஜ்கவுண்டர் தலைமையிலான குழுவினர். தமிழக நீதிக்கட்சி நிறுவனர் வாழவந்தியார் சரவணன் தலைமையில் மாநிலத் தலைவர் ஜெகன் மற்றும் மற்றும் குழு குழுவினர் மற்றும் மதிமுக, மற்றும் பல்வேறு கட்சிகள், பல்வேறு சங்கங்களை சேர்த்தவர்கள் வேட்டு கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லாள இளைய நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.