கடலூர் மாவட்டம் பொங்கல் கலை விழா பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்

 தமிழகத்தின் பராம்பரிய பெருவிழாவாகத் திகழும் தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு தினங்களாக பொங்கல் கலை விழா வெள்ளிக் கடற்கரையில் நடத்தப்பட்டது.

பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் படுத்துவதோடு பொங்கல் விடுமுறையை  மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும்  கொண்டாட  பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது, கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய பழக்க வழக்கங்களை  நினைவூட்டும்  வகையில் வெள்ளிக் கடற்கரையில்  நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

 15.01.2026 அன்று சித்ர லாஸ்ய லயா கலைக்குழுவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, இமயம் கலைக்குழுவின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, புரட்சி தப்பாட்டக் கலைக்குழுவின் தப்பாட்டம் நிகழ்ச்சி, கலைமகள் கரகாட்டம் கலைக்குழுவின் கரகாட்டம் நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ரீ சாய் நடன வித்யாலயா கலைக்குழுவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, நிலவின் நிழல் கலைக்குழுவின் கரகாட்டம் நிகழ்ச்சி, ஆதிமொழி கலைக்குழுவின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி,  முத்தாலம்மன் கலைக்குழுவின் பம்பை உடுக்கை கைசிலம்பு நிகழ்ச்சிகளையும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *