தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு துத்தி குளம் கிராம சமுதாய நாட்டாண்மைகள் சுரேஷ், அருள்ராஜ், முப்புடாதி, அன்பழகன், கதிரேசன், முனியராஜ், முத்துசாமி, ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். பள்ளி நிர்வாகி மை பா சேசுராஜ் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராசு அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவின் தொடக்கமாக நம் பாரம்பரியமான உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மாடுகள் பூட்டபட்ட மாட்டு வண்டி அலங்கரிக்கப்பட்டு இசை ஆசியர் மேள தாளங்கள் முழங்க மங்கள நாதஸ்வர இசையோடு பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம், சுருள் வாள் சுழற்றல் போன்ற நிகழ்வோடு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அனைத்து சமுதாய மக்களின்ஒற்றுமையை வெளிக் கொணரும் வகையில் அனைவரும் இணைந்து பொங்க விடும் பானை அரிசி காய்கறிகளோடு ஊர்வலமாக வந்து பின்னர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமத்துவ பொங்கலிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *