கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி ஸ்கேன்ஸ் அண்ட் லேப் மையம் முன்பாக நடைபெற்றது..

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநில பொருளாளர்,மருத்துவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் நடைபெற்ற விழாவில்,மேற்கு மண்டல செயலாளர் பேராசிரியர் காமராஜ் வரவேற்புரை ஆற்றினார்..

நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,தமிழக காப்பு கூட்டியக்கம் தலைவர் கா.ச.அப்பாவு,திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, உட்பட பல்வேறு கட்சி மற்றும் சமூக அமைப்பு தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி,ரவிக்குமார், நேரு தாசு, சிராஜுதீன் மைக்கேல், நந்தகுமார், கதிரவன், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

முன்னதாக திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது..

விழாவில் தலைமை உரையாற்றிய மருத்துவர் டென்னிஸ் கோவில் பிள்ளை, இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக மதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக இருப்பது குறித்து, பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு தெரு பிரச்சாரங்கள் நடத்தி வருவதாக கூறிய அவர்,
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கான விழா என்று கூறினார்…

ஆனால் தற்போது ஆளும் பா.ஜ.க.அரசு மக்களிடையே பிளவுகள் ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் பார்த்து வருவதாக கூறிய அவர்,தமிழக மக்கள் இது போன்ற பிரிவினை சக்திகளை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டர்கள் என அவர் தெரிவித்தார்..

தொடர்ந்து விழாவில் பேசிய முக்கிய விருந்தினர்கள் தமிழர்கள் ஒற்றுமையுடன் பொங்கல் பண்டிகையை சமத்துவ விழாவாக கொண்டாடி வருவதாகவும்,பொங்கல் விழா விவசாயிகளுக்கான உழவு தொழில் செய்பவர்களுக்கான விழா என கூறினர்…

எனவே பொங்கல் பண்டிகை என்பது அனைவருக்குமான விழா,சாதி,மத,வேற்றுமைகள் இல்லாத திராவிட தமிழர்களுக்கான விழா என தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *