விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள். தொழில் நிறுவனர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்துவருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் பல ஆண்டுகளாக சிறிய மழை வந்தால்கூட தெருக்களில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது அதிக மழையானால் வீடுகளுக்கும் புகுந்துவிடுகிறது
மிகுந்த துர்நாற்றம் மற்றும் நோய்தொற்று ஏற்பட்டு அவதிப்படுவதாக கூறப்படுகிறது இதுகுறித்து அந்த பகுதி குடியிர்ப்போர் நல்வாழ்வு .சங்க
தலைவர் அக்ரி சுப்பிரமணியன் கூறுகையில்
15 வருடங்களாக சஞ்சீவு மலை முதல் புதிய ஆதிக்குளம் கண்மாய் வரை உள்ள பிரதான பழமையான வாய்க்காலை தூர்வாராமல் நகராட்சி மெத்தனமாக இருந்து வருவதால் தான் இந்த நிலை தொடருகிறது. இதுகுறித்து
பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் நேரிலும் மனுவாகவும் கொடுத்தும். நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது வேதனையாக உள்ளது.
இந்திரா நகர் வாழும் மக்களுக்கு என்று தீர்வு கிடைக்கும்!?!?!
ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்..என்றார்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இங்குள்ள மக்கள்.
பலகட்ட போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளதாக. தெரிகிறது