தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் என் .எஸ் .எஸ் ஓய்.ஆர் .சி ஆர் ஆர் சி சார்பில் இரத்ததான முகாம்
கல்லூரி நிறுவன செயலாளர் கம்பம் நா ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதன்மை மருத்துவர் டாக்டர் பாஞ்சாலி முருகன் டாக்டர் எஃப் ஹர்னிகா மருத்துவ குழுவினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.பிரியா மேற்பார்வையின் கீழ் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் இரத்த அளவு மற்றும் எடை பற்றிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரத்தம் வழங்கினார்கள் மொத்தமாக கல்லூரியின் சார்பில் 50 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது
ரத்த தானம் வழங்கிய மாணவிகளுக்கு பெரியகுளம் அரசு தலைமை குடியிருப்பு மருத்துவமனையினரால் சான்றிதழ் வழங்கப்பட்டது கல்லூரி என் எஸ் எஸ் ஒய் ஆர் சி ஆர் ஆர் சி குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் பேராசிரியைகளும் கலந்து கொண்டனர்