கம்பம் சுருளி வேலப்பர் கோவில் மகா கும்பாபிஷேகம் யாகசாலை வேள்வி பூஜைகள் துவக்கம் தேனி மாவட்டம் கம்பம் நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சுருளி வேலப்பர் சுப்பிரமணியசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் வியாழக்கிழமை ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது
இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகளில் வேள்வி பூஜைகள் தொடங்கின கம்பம் நகரின் இதய பகுதியான வேலப்பர் கோவில் வீதி காந்திஜி வீதி என்ற முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சாமி திருக்கோவில் மூலவராக தண்டாயுதபாணியும் வள்ளி தெய்வானை பக்கவாட்டில் தனி சன்னதியிலும் எழுந்தருளி உள்ளனர் பழமையும் புராதானமும் பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோவிலில் தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாளான சஷ்டி தைப்பூசம் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் இதற்காக பிரமாண்டமான வேள்வி சாலை பூஜை செய்வதற்கான கோவிலுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர் வழிபாடு மகா கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் நவக்கிரக கோவத்துடன் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி கள் தொடங்கியது
நேற்று மாலை புனித நதிகள் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு தீர்த்த கலசங்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்து நகர் முழுவதும் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
ஆகஸ்ட் 20 இல் முதற் கால யாக வேள்விக்கான பூஜைகளும் மூலவர் துணை பரிவார தெய்வங்களின் சக்தியை திருக் குடத்துக்குள் எழுந்தருள செய்தல் அதன் பின் நாளை புதன்கிழமை ஆகஸ்ட் 21 இல் இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் துவங்கும் சிலைகள் பிரதிஷ்டை மாலை ஆறு மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் துவங்கும் இதன் பின் நாளை மறுநாள் வியாழக்கிழமை ஆகஸ்ட் 22 இல் நான்காம் கால யாக வேள்விகளுடன் கோ பூஜை சுமங்கலி பூஜை கன்னியா பூஜை வடுக பூஜை தொட்டு துவக்குதல் உயிரூட்டுதல் ஆகிய பூஜைகள் நடைபெற்று
தொடர்ந்து பேரொளி வழிபாடு புனித நீர் குட யாத்திரை அனுமதி பெறும் பூஜை நடைபெறும் ஆகஸ்ட் 22 இல் காலை 9 .30 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் கோல காலமாக நடக்க உள்ளன
இதற்காக கோவில் எதிரில் வேலப்பர் கோவில் வீதியில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன கோவில் அமைந்துள்ள வேலப்பர் கோவில் தெரு மட்டுமில்லாமல் கம்பம் நகரெங்கும் சீரியல் செட்டுகள் வண்ண வண்ண அலங்காரங்கள் அமைக்கப்பட்டு கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக முருக பக்த சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்