கோவை
சிஐடியு கோவை மாவட்டக் குழு சார்பில் வயநாடு நிவாரண நிதி ரூ. 3-லட்சம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம் கேரளா தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 21 புதன்கிழமை அன்று நடைபெற்ற சந்திப்பில் சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாவட்ட பொருளாளர் ஆர். வேலுசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கே. சந்தோஷ், சி. துரைசாமி ஆகியோர் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.