திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்த குடி ஊராட்சி கீழத்தெரு பகுதியில் போதிய வசதி இன்றி வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்துக்கு பாதுகாப்பான நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர்
எடுத்த தொடர் முயற்சியை அடுத்து, கடந்த 2023-24 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூபா 12 லட்சம் மற்றும் ஊராட்சி 15 வது நிதி குழுமானியம் மூலம் ரூபாய் 2 லட்சம் என 14லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்அனைத்து வசதிகள் உடன் கூடிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
அதனை அடுத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கோவிந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.பி. மணிகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத் அலி ஆகியோர் முன்னிலையில், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும்,ஒன்றிய குழு உறுப்பினருமான வீ. அன்பரசன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.