நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் விருத்தாசலம் நகரம் ஆலடி முடக்கு சாலையில் பொது மக்களுக்கு 500 மா.பாலா.கொய்யா.வேம்பு, நாவல்.சீத்தா, ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் கதிர்காமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் ராஜேந்திரன்.நகர பாசறை நிர்வாகி ஜெகநாதன், வரவேற்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர் மாநில கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமைத்துரை. மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தம்பி முருகேசன்,முன்னிலை வகித்தனர். பிரபாகரன்.தளபதி.சரவணன்.வனத்தையன்.ராஜாராம். விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நன்றியுரை சூர்யா கூறினார்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்
